தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணை
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பரிந்துரை மீது 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க கல்வித்துறை செயலருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்த்துவது குறித்த நிபந்தனைகளை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்த பரிந்துரை மீதும் முடிவு எடுக்க அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் தலைவர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement