பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை
திருவனந்தபுரம்: எர்ணாகுளம்-பெங்களூரு உள்பட 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். எர்ணாகுளம்- பெங்களூரு ரயிலுக்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 4 இடங்களில் நிறுத்தங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மாணவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாடலை பாடினர். இந்த வீடியோ தென்னக ரயில்வேயின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக இந்தப் பாடல் எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
Advertisement
Advertisement