பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு கருப்பு கொடி போராட்டம் காங்கிரசார் கைது, வீட்டுசிறை
திருச்சியில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், கலை, கோவிந்தராஜன் ஆகியோர் அவரவர் வீட்டில் போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி தலைமையில், செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, கிறிஸ்டோபர் திலக், குமரி மகாதேவன் முன்னிலையில், திருச்சி மாவட்ட காங்கிரசார், காந்தி மார்க்ெகட், மரக்கடை பகுதியில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.
கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, ஜெயம் கோபி, அழகர், தர்மேஷ், பகதூர்ஷா, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய் பவுல், சிறுபான்மை ராணுவ பிரிவு ராஜசேகரன், அன்பு ஆறுமுகம், கிளமெண்ட் நரேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதனால் முன்னெச்சரிக்கையாக திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு (பொ) தலைமையில் போலீசார், அரசனை அவரது அலுவலகத்தில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பொதுச்செயலாளர் ரேடியோ வெங்கடேசன், மாவட்ட செயலாளர் விஜய்ஆனந்த், அமைப்பு செயலாளர் தளபதி சுரேஷ், மாவட்ட தலைவர் குபேந்திரன், ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.