தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கம் கருப்பு சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்: சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய 5 நூல்கள் மற்றும் சட்டமன்ற பேரூரைகள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் தலைமை தாங்கினார்.

Advertisement

திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் ஜோ அருண், ரியாஸ்கான் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ரகுமான்கானின் பேச்சுக்கும்-எழுத்துக்கும் ரசிகன் நான். அவர் பேசுகின்ற கூட்டங்கள் என்றால், நான் விரும்பி பங்கேற்பதுண்டு. என்னைப் பொறுத்தவரைக்கும், அவர் ஒரு ஸ்டார். ஸ்டார் பேச்சாளர். சட்டமன்றப் பேச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டாக எவ்வளவோ விஷயங்களைச் சொல்லமுடியும். அவர் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாவும், தமிழ்நாடு முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும். எம்ஜிஆர் எத்தனையோ முறை ரகுமான்கானை தன்னுடைய கட்சிக்கு வரச்சொல்லி அழைத்தார். ஆனால், சிறிய சஞ்சலம் கூட இல்லாமல், கொள்கை உறுதியுடன் திமுகவில் இருந்தவர் ரகுமான்கான். அதிமுக ஒரு விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது.

இதைபற்றி சட்டமன்றத்தில் பேசிய ரகுமான்கான் என்ன சொன்னார் என்றால், ‘‘சின்னமோ இரட்டை இலை, அதனால் இரட்டைப் போக்கு\\” என்று படார் என்று சொன்னார். இதற்கு, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.

அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திமுக எப்படி கடுமையாக எதிர்த்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தையும் எதிர்ப்போம். இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்னையை திசை திருப்ப செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள். ரகுமான்கானின் சட்டமன்ற உரைகளை எல்லோரும் படிக்கவேண்டும். எப்படி பேசவேண்டும், எப்படி உரைகளை தயாரிக்க வேண்டும் என்பதற்கு, அவருடைய உரைகள் ஒரு பாடப்புத்தகமாக வந்திருக்கிறது. ரகுமான்கான் போன்ற இடி முழக்கங்களாக பலர் உருவாக வேண்டும்.

அதற்காகத்தான், ‘‘என் உயிரினும் மேலான ‘‘ - ”பாசறைப் பக்கம்” போன்ற பல முன்னெடுப்புகளை இளைஞர் அணியினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்ற அணியினரும், இன்னும் பல முன்னெடுப்புகளை எடுத்து, திமுக கொள்கை வீரர்களை உருவாக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரைக்கும், ‘‘கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி, வெற்றியை விளைவிக்க வேண்டும்” இயக்கத்தில் எத்தனைக் கோடி பேரைச் சேர்த்தாலும், அவர்களை கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்.

அதற்கு, பெரியார்-பாரதிதாசன்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் போன்றவர்களுடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் கொண்டு செல்வது போல, ரகுமான்கானின் திராவிட இயக்க தீரர்களுடைய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் போல திமுக துணை நிற்கும்; துணை நிற்கும். திமுக இருப்பது உங்களுக்காக தான்-இந்த சமுதாயத்திற்காக தான்-குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தின் மக்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும்-துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

* மக்களுடைய கவனத்தை திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

* பெரியார்-அண்ணா-கலைஞர் போன்றவர்களுடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் கொண்டு செல்வது போல, ரகுமான்கானின் சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.

Advertisement

Related News