பிரதமர் மோடியை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி பேச்சு!!
05:16 PM Aug 08, 2025 IST
டெல்லி :தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி பேசினார். வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு மாற்ற முனையம் அமைக்க உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து, தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த துணை நின்றதற்கு நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கனிமொழி வலியுறுத்தினார்.