பிரதமராக பொறுப்பேற்ற மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முதல் கையெழுத்திட்டார்!!
Advertisement
இதையடுத்து, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.பிரதம மந்திரி கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான முதல் கோப்பில் அவர் கையெழுத்திட்டார். நாடு முழுவதும் சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 20,000 கோடி விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, "புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement