தொடக்க கல்வி இயக்ககம் முன்பு டிட்டோ ஜாக் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்
சென்னை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் சென்னயில் நடந்தது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
அதன்படி தொடக்க கல்வித்துறையில் தணிக்கை தடை என்னும் பெயரில் ஆசிரியர்கள் ஓய்வு ஊதியம் பெற முடியாத நிலையும், பிலிட் பட்டம் பெற்று தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வழக்கப்பட்ட பிஎட் உயர்கல்விக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்துக்கு விதிக்கப்பட்ட தவறான தணிக்கை தடை, திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் பெற்ற முதுநிலை பட்டத்துக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம், எம்ஏ பொருளாதாரம் , எம்.காம் உள்ளிட்ட உயர்கல்விக்கு வழங்கப்பட்ட ஊக்கு ஊதியம் ஆகியவற்றுக்கெல்லாம் தணிக்கை தடை விதித்து பல லட்சம் ரூபாய் பணத்தை ஆசிரியர்கள் திரும்ப செலுத்த வைக்கும் நிகழ்வுகளால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் பெற்று வந்த பணப்பலன்கள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மீண்டும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வருதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைள் குறித்து கல்வி அதிகாரிகள் மற்றும் அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் பேச்சுவார்த்தை போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நிலையில்,
அரசு தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் டிசம்பர் 8ம் தேதி முதல் சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்ககம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட தீர்மானத்தின்படி கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தில் போராட்டத்தை தொடக்க இருக்கிறோம்.
இவ்வாறு டிட்டோஜாக் தெரிவித்துள்ளது.