அதிபர் டிரம்ப் அதிரடி வெளிநாட்டில் தயாரிக்கும் சினிமாக்களுக்கு 100% வரி
நியூயார்க்: அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாய் திருடுவது போல, திரைப்பட தயாரிப்பு வணிகம் அமெரிக்காவிடமிருந்து மற்ற நாடுகளால் திருடப்பட்டுள்ளது. இந்த நீண்டகால முடிவடையாத பிரச்னையை தீர்க்க, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பேன்’’ என கூறி உள்ளார்.ஏற்கனவே பல்வேறு வரிகளை விதித்துள்ள டிரம்ப் தற்போது திரைப்பட துறையையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் அல்லாத பிற அனைத்து படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்பதால், டிரம்பின் இந்த முடிவு பல மொழிகளில் திரைப்படங்களைத் தயாரிக்கும் இந்திய திரைப்படத் துறையை கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது.