காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது: தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு அறிவிப்பு
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கப்படும் குடியரசு தலைவர் விருதை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான வீரதீர சேவைக்கான விருது, மிக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது மற்றும் மெச்சதக்க சேவைக்கான விருது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருது ஆண்டுதோரும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தமிழகத்தை சேர்ந்த 24 காவலர்களுக்கு குடியரசு தலைவரின் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கப்படும் சிறப்பான சேவைக்கான குடியரசு தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 3 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையை சேர்ந்த ஏடிஜிபி பால நாகதேவி, காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஐஜி லட்சுமி உள்ளிட்ட 3 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி, துணை காவல் ஆணையர் சக்திவேல், காவல் கண்காணிப்பாளர் விமலா, துணை காவல் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன், கூடுதல் கண்காணிப்பாளர் கோபால சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தேவசகாயம், இணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், காவல்துறை உதவி ஆணையர்கள் கிறிஸ்டின் ஜெயசில், முருகராஜ், காவல் ஆய்வாளர் பொன்ராஜ், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் அதிசயராஜ், ரஜினிகாந்த், துணை ஆய்வாளர் ஸ்ரீவித்யா, துணை ஆய்வாளர்கள் ஆனந்தன், கண்ணுசாமி, பார்த்திபன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நந்தகுமார் மற்றும் துணை ஆய்வாளர் கணேசன் ஆகிய 21 காவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.