அதிபர் டிரம்பின் வரி விதிப்பின் தாக்கம் சூரத்தில் 1.35 லட்சம் பேர் வேலையிழப்பு: சசி தரூர் தகவல்
சிங்கப்பூர்: இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தின் விழா (நேட்கான் 2025) சிங்கப்பூரில் நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்பின் வரி விதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
குஜராத்தின் சூரத்தில் ரத்தின கற்கள், நகை வணிகத்திலும் ஏற்கனவே 1.35 லட்சம் பேர் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே போல் கடல் உணவு மற்றும் உற்பத்தி துறையிலும் மிக பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளன. அமெரிக்காவில் டிரம்புக்கு முன்பு 45 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். ஆனால் இது போன்ற நடத்தை கொண்ட அதிபர்கள் இதுவரை இருந்தது கிடையாது. எந்த உலக தலைவராவது தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’’ என்றார்.