அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை சுட்டுக்கொன்ற கொலையாளி கைது
ஓரெம்: அமெரிக்காவின் யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த புதனன்று நடந்த பொது நிகழ்ச்சியில் அதிபர் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் கலந்து கொண்டார். துப்பாக்கி சூடு வன்முறை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Advertisement
இந்நிலையில் நேற்று காலை அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சார்லி கிர்க் கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதிபர் டிரம்ப், சார்லி கிர்க் கொலை செய்த கொலையாளி பிடிபட்டுள்ளார். சட்ட அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ஒருவர் மூலமாக கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார். கைது செய்யப்பட்டவரின் பெயர், விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
Advertisement