குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு..!!
மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை தொடர்ந்து 18வது மக்களவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை குடியரசு தலைவருக்கு வழங்க வேண்டும். பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார். அதன் அடிப்படை விதிமுறைகளின்படி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளது.
தேர்தல் ஆணையம் பட்டியலை வழங்கிய பிறகு குடியரசு தலைவர் 18வது மக்களவை பணிகளை தொடங்குவதோடு எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அதற்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கட்சியும் குடியரசு தலைவரை சந்தித்து உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்று ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். இரண்டு பட்டியலையும் குடியரசு தலைவர் சரிபார்த்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று முடிவு செய்யும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பார். இத்தகைய நடைமுறை இன்று நடைபெற உள்ளது.