Home/செய்திகள்/Prayagraj Maha Kumbh Mela Devotees Killed In Accident
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி
08:36 AM Feb 15, 2025 IST
Share
லக்னோ: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கும்பமேளாவுக்கு சென்று கொண்டிருந்தபோது பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள்.