பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் கொலை ஜேடியு வேட்பாளர் கைது
பாட்னா: பீகார் மாநிலம்,மொகாமா சட்டமன்ற தொகுதியில் பிரசாந்த் கிஷோரின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த துலார்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜேடியு வேட்பாளரும் மாஜி எம்எல்ஏவுமான அனந்த்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மணிகாந்த் தாக்குர்,ரஞ்சித் ராம் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Advertisement
அவர்கள் மூவரையும் பாட்னாவில் உள்ள தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பாட்னாவில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement