பிபிஎல் பிளே ஆப் செல்ல கடைசி வாய்ப்பில் மாகே: ஏற்கனவே 3 அணிகள் முன்னேற்றம்
இதுவரை தலா 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள வில்லியனூர் கிங்ஸ், ஏனாம் ராயல்ஸ், ஒயிட்டவுன் ெலஜண்ட்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இந்த 3 அணிகளும் தலா 9 வெற்றிகளுடன் தலா 12 புள்ளிகளை பெற்று முதல் 3 இடங்களில் இருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஆட்டங்கள் எந்த அணிக்கு எந்த இடம் என்பதை உறுதிச் செய்யும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிச்சுற்றில் விளயைாட முடியும்.
இந்நிலையில் எஞ்சியிருக்கும் ஒரு இடத்துக்கான போட்டியில் மாகே ஸ்டிரைக்கர்ஸ், ஊசுடு வாரிய்ஸ், ஆகியவை களத்தில் உள்ளன. எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஒன்றில் தோற்றால் கூட இவை லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான். அதே நேரத்தில் மாகே தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஊசுடு அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் மாகே அணி எளிதாக 4வது இடத்தை உறுதி செய்து பிளே ஆப் சுற்றுக்கு கடைசி அணியாக முன்னேறும். அதே வேளையில் ஊசுடு வென்றால் அந்த அணி பிளே ஆப் வாய்பபை பெறும். காரணம் மாகேவை விட ஊசுடு ரன் ரேட் விகிதம் அதிகம்.
அதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி அணி என்ற பரபரப்பு லீக் சுற்றின் கடைசி நாளான இன்று வரை தொடர உள்ளது. அதே நேரத்தில் நேற்று நடந்த 27வது லீக் ஆட்டத்தில் ஊசுடு அணி 5விக்கெட் வித்தியாசத்தில் காரைக்கால் அணியை காலி செய்தது. எனவே காரைக்கால் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.