மின்கொள்முதல் விவகாரங்களில் முறைகேடுகள் இருந்தால் அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் ரத்து: வங்கதேசம் திட்டவட்டம்
டாக்கா: கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் அதானி பவர் மற்றும் வங்கதேசம் இடையேயான 2017ம் ஆண்டு மின்விநியோக ஒப்பந்தம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய மறுஆய்வுக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குழுவின் தலைவர் மொய்னுல் இஸ்லாம் சவுத்ரி கூறுகையில், மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யும்போது மிகப்பெரிய ஊழல், கூட்டுச்சதி, மோசடி , முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதங்கள் இருப்பதை கண்டறிந்தோம்” என்றார்.
இது தொடர்பாக எரிசக்தி விவகார ஆலோசகர் முகமது பவுசல் கபீர் கான் கூறுகையில், ‘‘பொதுவாக ஒப்பந்தங்களில் எந்த ஊழல்களும் நடக்கவில்லை என்று கூறுகின்றன. ஆனால் வேறுவிதமாக ஊழல் அல்லது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தயங்கமாட்டோம்” என்றார்.