ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, ஹோகைடோ தீவில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.