அமெரிக்காவை தாக்கும் வகையில் உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா
பியோங்யாங்: உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. வடகொரியா நாட்டின் சார்பில் அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை 86 நிமிடங்கள் விண்ணில் பறந்து நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்தில் தரையிறங்கியது. இதுவரை வடகொரியா சோதித்ததில் மிக நீண்ட தூர ஏவுகணை இதுவாகும். ஏவுகணை 7,000 கிமீ உயரத்தை எட்டியது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள் ஆகியோர் ஏவுகணை ஏவப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. அண்டை நாடான தென்கொரியாவுடனான உறவில் விரிசல் நீடித்து வரும் நிலையில், ஐ.நா.வின் தடைகளை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.