சக்திவாய்ந்த ஜெட் இன்ஜினை இந்தியா விரைவில் தயாரிக்கும்: ராஜ்நாத்சிங் உறுதி
புதுடெல்லி: இந்தியா சக்திவாய்ந்த ஜெட் இன்ஜினை தயாரிக்கும் என்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முன்மொழியப்பட்ட சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நிறுவல்களுக்கும் முழுமையான வான்வழி பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
சக்திவாய்ந்த உள்நாட்டு ஜெட் இன்ஜினை உருவாக்கும் சவாலை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் இந்த பணிகள் தெரியும். எந்தவொரு எதிரி அச்சுறுத்தல்களையும் சமாளிப்பதற்கும் வான் பாதுகாப்பு கேடயம் தற்காப்பு மற்றும் தாக்குதல் கூறுகளை கொண்டிருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூரின்போது நாம் பார்த்தது போல் இன்றைய போர்களில் வான் பாதுகாப்பு திறனின் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் சுதர்சன் சக்ரா பணி நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தீவிரவாதம், பிராந்திய மோதல்கள் மற்றும் கட்டணப் போர் ஆகியவற்றின் இன்றைய சகாப்தத்தில் இந்தியாவின் ராணுவம் நிச்சயமற்ற வெளிநாட்டு விநியோகங்களை சார்ந்து இருக்க முடியாது.” என்றார்.