வங்கதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6 பேர் பலி
கொல்கத்தா: வங்கதேசத்தின் நர்சிங்டி நகரை மையமாகக் கொண்டு நேற்று காலை சுமார் 10.38 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இதன் அதிர்வுகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு உணரப்பட்டன. வங்கதேச தலைநகர் டாக்கா, சட்டோகிராம், சில்ஹெட் நகரங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
Advertisement
Advertisement