வங்கதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது
Advertisement
டாக்கா: வங்கதேசத்தில் காலை 10 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசம் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் (Disaster management teams) நிலைமையைக் கண்காணித்து வருகின்றன. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Advertisement