தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வறுமை துரத்துவதால் மருத்துவம் படிக்க போராடும் மாணவி: மாணவி பூமாரியின் மருத்துவப் படிப்புக்கு அரசு உதவ கோரிக்கை

 

விருதுநகர்: விறகு வெட்டி குடும்பத்தை காப்பாற்றும் பெண் தொழிலாளியின் மகள் MBBS படிக்க தேர்வாகி உள்ளார். அவரது மருத்துவ கனவை நினைவாக்க அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாணவி பூமாரி. தந்தையை இழந்ததால் அவரது தாய் பொன்னழகு, விறகு வெட்டி வருமானம் பார்த்து தமது மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார். வறுமை துரத்திய போதும் மாணவி பூமாரி 12 ல் 573 மதிப்பெண் பெற்று தான் படித்த அரசு பள்ளியில் முதலீடம் பிடித்து அசத்தினார். மருத்துவராக வேண்டும் என்று தமது கனவை சுமர்ந்து நீட் தேர்வை எழுதிய மாணவி பூமாரி அதிலும் தேர்ச்சி பெற்றார். 7.5% இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால் கல்வி கட்டணத்தை செலுத்த அவரது குடும்பம் சிரமம்பட்டு வருகிறது. MBBS படிக்க இடம் கிடைத்தாலும் வறுமையால் மருத்துவ கனவை நனவாக்க மாணவி பூமாரி குடும்பம் போராடி வருகிறது. ஏற்கனவே கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்ததாக கூறும் மாணவி பூமாரியின் தயார் தமது பிள்ளையின் மருத்துவ படிப்புக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவி பூமாரி புலிக்குறிச்சி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவராக உள்ளார். எனவே மாணவிக்கு மாவட்டம் நிர்வாகம் உதவ வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.