பவுன் ரூ.75,760 ஆக உயர்ந்து தங்கம் விலை வரலாற்று உச்சம்
சென்னை:தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,000 வரை உயர்ந்து நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது.
நேற்று மட்டும் கிராமிற்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,470க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.75,760க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.