பவுன் மீண்டும் 75 ஆயிரத்தை நெருங்கியது
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.75,760க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து தங்கம் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் காணப்பட்டு வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,305க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் தங்கம் 74,440க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,355க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் 74,840க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.