தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிரடியாக உயர்ந்து வரும் ஊட்டி உருளைக்கிழங்கு விலை

*விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1935 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 46,548 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் வாகனங்கள் மூலமாக விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இங்கு சீசன் இல்லாத நாட்களில் 3 முதல் 4 லாரிகளில் சுமார் 15 டன் அளவிற்கும், சீசன் நாட்களில் 40 முதல் 50 லாரிகளில் சுமார் 100 டன் வரையும் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பின்னர், கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணியாளர்கள் மூலமாக உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு தரம் வாரியாக 45 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி ஏலம் விடப்படுகின்றன.

இங்கு வரும் வியாபாரிகள் உருளைக்கிழங்கு மூட்டைகளை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துச்சென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்,தூத்துக்குடி துறைமுகம் வழியாக மாலத்தீவு, இலங்கைக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு 3 1/2 லோடுகள் (தோராயமாக 25 டன்) ஊட்டி உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வியாபாரிகள் உருளைக்கிழங்குகளை போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு ரூ.3270-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2000-க்கும் ஏலம் போனது. இதேபோல் நேற்று அதிகபட்சமாக ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ கொண்ட மூட்டை ஒன்றிற்கு ரூ.3100 க்கும், குறைந்தபட்சமாக ரூ.1860 க்கும் ஏலம் போனது.

கடந்த சில தினங்களாகவே ஊட்டி உருளைக்கிழங்கு விலை 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.3000-க்கும் அதிகமாகவே விற்பனையாகி வருகிறது. ஊட்டி உருளைக்கிழங்கின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்களில் இருந்து தற்போது மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு உருளைக்கிழங்குகளின் வரத்து குறைந்துள்ளது. அதேவேளையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உருளைக்கிழங்குகள் அதிகளவில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஊட்டி உருளைக்கிழங்குகள் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20-க்கும் விற்பனையாகி வந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் ஊட்டி உருளைக்கிழங்குகள் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.68-க்கும், குறைந்தபட்சமாக ரூ.41-க்கும் விற்பனையானது.

இதனால் விதை கிழங்குகள், உரம், பறிக்கும் கூலி போக சற்று விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும் வகையில் உள்ளது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளது. இனிவரும் காலங்களில் ஊட்டி உருளைக்கிழங்குகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

Advertisement