நாளை மறுநாள் திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நாளை மறுநாள் திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்த பாடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும். நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும் தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.எனவே, தற்போது தேர்வை தள்ளிவைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்து. அரசு தரப்பு வாதத்தை ஏற்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.