தேர்தலில் தபால் வாக்குகள் அறிவிப்பதில் புதிய நடைமுறை: தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!
டெல்லி: தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது புதிய நடைமுறையில், 18வது சுற்றில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்க வேண்டும். 20 சுற்றுகள் இருந்தால் 18வது சுற்று முடிவில் தபால் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அடுத்தசுற்று எண்ண வேண்டும். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.