முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்க உத்தரவு
02:31 PM May 27, 2024 IST
Share
மதுரை: முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் மறுசீரமைப்பு சிகிச்சை முறையில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தக்கூடிய விற்பனை பொருட்கள் அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.