போர்ச்சுகல் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழப்பு!!
லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் கேபிள் கார் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குளோரியா புனிகுலர் கேபிள் கார், நகரத்தின் வரலாற்று சின்னமாகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது.
உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.