போர்ஷே எலெக்ட்ரிக் கார்
போர்ஷே நிறுவனம், கெயினே என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் கெயினே எலெக்ட்ரிக், கெயினே டர்போ எலெக்ட்ரிக் என 2 வேரியண்ட்கள் உள்ளன. இந்த இரண்டு வேரியண்டகளிலும் 113 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் டூயல் மோட்டார்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளது. கெயினே எலெக்ட்ரிக் காரில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 835 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்தால் 642 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம்.
டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட்டில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 1,156 எச்பி பவரையும், 1,150 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 11 கிலோவாட் அவர் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 14.5 அங்குல வளைவான தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உடள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.76 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.