போர்ஷே கயன்
போர்ஷே நிறுவனம், போர்ஷே கயன் பிளாக் எடிஷன் மற்றும் போர்ஷே கூபே பிளாக் எடிஷன் ஆகிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு கார்களிலுமே 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 353 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டார்க்யூ கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. புதிதாக, 21 அங்குல ஆர்எஸ் ஸ்பைடர் அலாய் வீல்கள் உள்ளன.
பெயருக்கேற்ப இந்தக் கார்களின் உட்புறமும் வெளிப்புறமும் கருப்பு நிற தீமில் மெருகேற்றப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூப், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக கயன் பிளாக் எடிஷன் சுமார் ரூ.1.8 கோடி எனவும், கயன் கூபே பிளாக் எடிஷன் சுமார் ரூ.1.87 கோடி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.