ஆபாசப் படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாக புகார் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா மேனன். இவர், தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான மார்ட்டின் என்பவர் கொச்சி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம் களிமண் உள்பட மலையாளப் படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார். மேலும் காமசூத்ரா போன்ற ஆணுறை விளம்பரத்திலும் நடித்து பணம் சம்பாதித்துள்ளார். ஆபாசப் படங்களில் நடித்து பணம் சம்பாதித்த நடிகை ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மார்ட்டின் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவு செய்ய கொச்சி போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.