பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் மதியம் உபரி நீர் திறப்பு: முதல் கட்டமாக வினாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுவதாக தகவல்
திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் இன்று நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆந்திராவில் உள்ள அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ஆனது, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வந்து கொண்டிருப்பதினாலும், பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது முழு கொள்ளளவை எட்ட இருப்பதால் முதல் கட்டமாக கொசஸ்தலை ஆற்றுக்கு 700 கன அடி நீர் இன்று மதியம் திறக்கப்படவுள்ளது.
இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிறுவகம் சார்பில் முதல் கட்ட அபயா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அணை பாதுகாப்பு கருதி இன்று மதியம் நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய தினம் பூண்டி ஏரிக்கு 1980 கன அடி நீரானது வந்து கொண்டிருந்தது. அது இன்றிய தினம் 2010 கன அடியாக அதிகரித்துள்ளது. அதுபோன்று கிருஷ்ணா நதிக்கு நீர் வராது 270 கன அடியாக உள்ளது. இந்த ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் தேவைக்காக 700 கன அடியானது தினம் தோறும் அனுப்பப்பட்டு வருகின்றது.
அதுபோன்று சென்னை குடிநீர் தேவைக்காக மெட்ரோ வாட்டருக்கு 47 கன அடியானது நீர் திறக்கப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடியில் 34.74 அடி உயரத்தில் நீர் இருப்பு இருந்து கொண்டு இருக்கிறது. 99 சதவீதம் நீரானது ஏரியில் நிரம்பி இருப்பதால் அணை பாதுகாப்பு கருதி இன்று மதியம் முதல் கட்டமாக 700 கன அடி உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு அது தாம்பரம் பக்கம் அணை காட்டில் தேக்கம் வைக்கப்பட்டு சோழவரம் ஏரிக்கு அனுப்பப்பட உள்ளதாக நீர் வரை துறை அதிகாரிகளான தகவல் தெரிவிக்கின்றனர்.