பூம்புகாரில் 10ம் தேதி மகளிர் மாநாட்டுக்கு குடும்பத்துடன் வாரீர்: ராமதாஸ் அழைப்பு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பெண்ணடிமை தீர்ந்து தன்னுரிமை பெற்றிட, வரதட்சணை என்னும் சமூகப் புற்றுநோய் நீங்கிட ஆணுக்குப் பெண்ணிங்கே அனைத்திலும் நிகர் என உணர்த்திட, அன்னையர் குலமே அணி திரண்டு வாரீர், அரிய கருத்துக்கள் சுவைத்திட பாரீர், புறப்பட்டு பூம்புகார் வாரீர் வரும் 10ம் தேதி ஞாயிறு புரட்சிக்கனல் ஏந்திடும் மகளிர் மாநாடு காவிய திரு நகராம் பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர், வாரீர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.