பூலித்தேவர் பிறந்த நாள்; விடுதலை போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதியவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதியவர் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளமான பூலித்தேவரின் பிறந்த நாள். சிப்பாய்ப் புரட்சிக்கும் நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ்நிலத்தில் புரட்சி வெடித்துவிட்டது. தென்னகம் அந்நியருக்குப் பட்டா போட்டு தரப்படவில்லை எனப் பறைசாற்றும் விதமாகப் போரிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதிய பூலித்தேவரின் புகழ் போற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement