போந்தவாக்கம் ஊராட்சியில் மாட்டுதொழுவமாக பயன்படும் புதிய ரேஷன் கடை கட்டிடம்
Advertisement
இதனால் மாதவரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2023 - 2024ம் ஆண்டு ₹ 12.30 லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை மக்களின் பயன்பாட்டிற்கு விடாததால் அப்பகுதி சேர்ந்தவர்கள் மாடுகளை கட்டிப்போட்டு தொழுவமாக மாற்றிவிட்டனர். எனவே, ரேஷன் கடையை பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement