பொன்னியின் செல்வன் பட பாடல் தொடர்பான வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவு ரத்து
டெல்லி: பொன்னியின் செல்வன் பட பாடல் தொடர்பான வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. காப்புரிமை வழக்கில் ரூ.2கோடி அபராதம் செலுத்த டெல்லி ஐகோர்ட் ஏ.ஆர்.ரகுமானுக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன்-2 படத்தில் வீர ராஜ வீரா பாடலில் உஸ்தாத் பயாஸ் என்பவரது பாடலை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. சிவ ஸ்துதி என்ற பாடல் போன்று பொன்னியின் செல்வன் பட பாடல் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான ஏ.ஆர்.ரகுமானின் மேல்முறையீட்டை ஏற்று தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் ஹரிசங்கர், ஓம் பிரசாத் சுக்லா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
Advertisement
Advertisement