பொன்னேரி அருகே தடுப்பு சுவரில் ஏறி அந்திரத்தில் தொங்கிய பேருந்து: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்து விபத்து
சென்னை: பொன்னேரி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தடுப்பு சுவரில் ஏறி அந்திரத்தில் தொங்கும் கட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியில் மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் அதே வழி தடத்தில் பொன்னேரிக்கு திரும்பும் தடம் எண் 40 பேருந்து இன்று காலை வழக்கம் போல மீஞ்சூர்க்கு சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பியது காட்டூர் கிராமத்தை கடந்து தத்தைமஞ்சத்துக்கு செல்லும் போது வாகனத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அரசு பேருந்தில் முன் சக்கரம் ஷாம் ஆகி அதனால் மேற்கொண்டு அதனை திருப்ப முடியாத சூழல் ஏற்பட்டதாக சொல்ல படுகிறது. அந்த நேரத்தில் வளைவில் திரும்ப போது வாகனத்தில் ஒரு சக்கரம் மட்டும் எரிக்கரையின் தடுப்பு சுவரில் ஏறி கீழே இரங்கி பேருந்து அந்தரத்தில் நிற்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த 8 பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் அலறியடித்துபடி பேருந்தில் இருந்து உடனடியாக பத்திரமாக கீழே இறங்கினர். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தற்போது மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்து வந்த காரணமாக பல்வேறு தரப்பினரும் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து இருந்த சூழலில் இந்த மழையின் காரணமாக அந்த பேருந்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விபத்து நேரிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏரிக்கரையின் தடுப்பு சுவரில் பேருந்து அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் சம்பவம் தற்போது இந்த பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.