பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!!
ராணிப்பேட்டை: பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திராவின் கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 340 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் பொன்னை ஆற்றில் மக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement