சொத்து குவிப்பு வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பை மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
Advertisement
இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இறுதி விசாரணை நேற்று முதல் மார்ச் 15 வரை நடைபெறும் என்று தேதி நிர்ணயித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 15 முதல் 19ம் தேதிகளில் இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி நீதிபதி தள்ளிவைத்தார்.
Advertisement