பொன்குமார் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொழிலாளர்களுக்கு விரோதமாகநான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய மோடி அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு இழைக்கும் துரோகம். இச்சட்டத்தை கண்டித்து வரும் 15ம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கின் அருகில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement