டெல்லி: ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.பொங்கல், மகர சங்கராந்தி பண்டிகை காரணமாக தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. யூஜிசி நெட் தேர்வை ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் நடத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.