வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது!!
03:03 PM May 21, 2024 IST
Share
புதுச்சேரி : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் இயங்கும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.