பொன் மாணிக்கவேல் மீதான புகாருக்கு முகாந்திரம்: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுரை: பொன் மாணிக்கவேல் மீதான குற்றப்பத்திரிகையை ஐகோர்ட் மதுரை கிளையில் சிபிஐ தாக்கல் செய்தது. பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் அனைத்தும் மிகத் தெளிவாக உள்ளது. பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் தெளிவாக பதிவாகியுள்ளது. குற்றத்துக்கான சாராம்சம், முகாந்திரம் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் தெளிவாக உள்ளது என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்