உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரம் டெல்லி: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
Advertisement
அதேபோல் உலகின் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. உலகின் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் கடந்த 2023ம் ஆண்டில் 3வது இடத்தில் இருந்த இந்தியா 2024ம் ஆண்டில் 5வது இடத்துக்கு சென்றுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு மிகப்பெரும் சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால் இந்தியர்களின் ஆயுள்காலம் 5.2 ஆண்டுகளாக குறைகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகவும் மாசடைந்த நகரமாக கலிபோர்னியா உள்ளது. பிற நகரங்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், ஆன்டாரியோ ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேசமயம் சியாட்டில், வாஷிங்டன் ஆகியவை தூய்மையான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகின் மிகவும் தூய்மையான பகுதியாக பியூர்டோ ரிகோவின் மயாகீஸ் இடம்பிடித்துள்ளது.
Advertisement