பொள்ளாச்சி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாழைத்தார் ஏலம்
பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பொள்ளாச்சி மார்க்கெட்டில் இன்று வாழைத்தார் கூடுதல் விலைக்கு ஏலம் போனது. பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டில் வாரத்தில் ஞயிறு மற்றும் புதன்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரமாக மழை குறைவாக இருந்தது. இதனால் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார்களின் வரத்து அதிகமாகவே இருந்துள்ளது.
இருப்பினும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விஷேச நாட்கள் இல்லாததால், அனைத்து ரக வாழைத்தார்களும் எதிர்பார்த்த அளவிற்கு, விலை கிடைக்காமல் போனது. இந்த வாரத்தில் இன்று நடந்த சந்தைநாளின்போது, பொள்ளாச்சி மற்றும் சேத்துமடை, ஆனைமலை, ஓடையக்குளம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தூத்துக்குடி, கரூர், திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தது. வரத்து அதிகமாக இருந்தாலும், அனைத்து ரக வாழைத்தார்களும், தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையதனதுனது. இதில், செவ்வாழை தார் ஒன்று(கிலோ கணக்கில்) ரூ.65 வரையிலும், சாம்ராணி ரூ.40க்கும். பூவந்தார் ரூ.40க்கும், மோரீஸ் ரூ.38க்கும், ரஸ்தாளி ரூ.42க்கும். நேந்திரன் ஒருகிலோ ரூ.42க்கும். கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.48க்கு என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.