பொள்ளாச்சியில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி: பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வேளாண் பட்டதாரி
பொள்ளாச்சி: தென்னை நகரமான பொள்ளாச்சியில் பசுமைகுடியில் அமைத்து வெள்ளரி சாகுபடியில் பல லட்சம் ரூபாயை ஈட்டிவரும் வேளாண் பட்டதாரி முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் தென்னை சாகுபடி குறைந்து போன நிலையில், அதனை சார்ந்த தொழில்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாயூர் பகுதியை சேர்ந்த வேளாண் பட்டதாரி இளைஞர் அரவிந்த் விஜய் தென்னை சாகுபடி விட்டு விலகி ஆங்கில வெள்ளரி விவசாயத்துக்கு மாறியுள்ளார். ரூ.40 முதல் ரூ.45 லட்சம் முதலீட்டில் பாலி ஹவுஸ் எனப்படும் பசுமை குழு அமைத்து 1 ஏக்கரில் 40 சென்டி மீட்டர் இடைவெளியில், பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஆங்கில வெள்ளரிக்காய்யை பயிரிட்டு உள்ளார்.
கீழே படர்ந்து வளரக்கூடிய வெள்ளரிக்காய் செடிகளை செங்குத்தாக படரச் செய்வதால் மூன்று மடங்கு விளைச்சல் கிடைப்பதாக அரவிந்த் விஜய் கூறியுள்ளார். சொட்டு நீர் பாசனம் கையாளும் அரவிந்த் விஜய் 120 நாள் பயிரான வெள்ளரியை சராசரியாக ஒரு பருவத்துக்கு 50 டன் அறுவடை செய்வதாக தெரிவித்துள்ளார். விளைந்த காய் ஒன்று 180கிராம் எடையும், வெள்ளை பச்சைநிறத்தில் காணப்படும் வெள்ளரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30லட்சம் அளவுக்கு வருமானம் நீட்டுவதாக அரவிந்த் விஜய் குறிப்பிட்டுள்ளார்.