போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 25 மாத ஓய்வுகால பலனை வழங்க வேண்டும். 2003 ஏப்ரல் 1ம்தேதிக்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 18ம்தேதி 10 மாதத்திற்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மீதி உள்ள 15 மாதங்களுக்கு ஓய்வுகால பலனை வழங்கவில்லை. இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
Advertisement
Advertisement