செங்கோட்டையன் கதை முடிந்தது எஸ்ஐஆர் பணிகள் அவசியம்: எடப்பாடி பழனிசாமி வக்காலத்து
கோவை: செங்கோட்டையன் கதை முடிந்து போனது, எஸ்ஐஆர் பணி முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடந்து வருகிறது. பல சட்டமன்ற தொகுதிகளில் இறந்த வாக்காளர்களின் பெயர், வீடு இடமாற்றம் செய்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து...
மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தல்
சென்னை: மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: மேற்கு ஆப்ரிக்கா-மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த பொன்னுதுரை,...
வரும் 13ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 13ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது. இதில், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து...
எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி.தினகரன் பதில் துரோகம் அதன் வேலையை காட்டும்: ராயப்பேட்டைக்கு வெளியே கூட்டணிக்கு வரும்படி கூவிக்கூவி அழைக்கின்றனர்
சென்னை: சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். விஜய்யை கூட்டணிக்கு வா வா என்று கூவி பார்த்தார்கள். ஆனால் தெளிவாக அவருடைய...
டிஜிட்டில் இந்தியா என்று முழங்கியவர்கள் இப்போது பேப்பர், பேனாவுடன் ஏன் அலைகிறீர்கள்? தேர்தல் ஆணையருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் சரமாரி கேள்வி
சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்கும்படி கோரிக்கை வைத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6 கோடியே 36 லட்சம். ஒருவருக்கு இரண்டு எஸ்ஐஆர் விண்ணப்பம் கொடுத்தால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பம் பிரிண்ட் செய்தாகி விட்டதா? இந்த பணியில் எத்தனை ஊழியர்...
காங்கிரசில் எஸ்ஐஆர் பணி கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிறப்பு தீவிர திருத்தத்தை கண்காணிக்கவும், பிஎல்ஏ 2 நியமனங்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தீவிரப்படுத்தவும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்துக்கு, அசன் மவுலான எம்எல்ஏ, இமயா கக்கன், லட்சுமி ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தாம்பரம் நாராயணன், வழக்கறிஞர் மதுமதி, எஸ்.டி.நெடுஞ்செழியன், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளதை கண்டித்து இன்று திமுக கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும்...
இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதம்: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள எஸ்ஐஆர் உதவி மைய 08065420020 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: பொதுமக்கள் சந்தேகத்துக்கு உதவ நடவடிக்கை
சென்னை: எஸ்ஐஆர் குறித்து பொதுமக்களுக்கு எழும் கேள்வி, சந்தேகத்துக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் 08065420020 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடும் திமுகவினர் மற்றும் பொதுமக்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் சென்னை...