80 = எண்பலது, வழக்கறிஞர் = வழக்கர் தமிழை வச்சு செய்யும் புஸ்ஸி ஆனந்த்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
மாநில பொறுப்பாளர்கள் எண்பலதி ஒரு பேர், மாநில பொறுப்பாளர்கள் பதினோரு பேர், மாநில தகவல் தொழிநுட்ப பிரிவு பதினோரு பேர், மாநில ஊடகர் பிரிவு பதினோரு பேர், மாநில வழக்கர் அணி பதினோரு பேர், மாநில சட்ட ஆலோச அணி பதினோரு பேர், சார்பு அணி நிர்வாகிகள் எட்டாயிரத்தி ஐநூத்தி எண்பலது பேர், கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள் ஒரு லட்சத்தி என்பலதி எழுத்தி ஐம்பது பேர், கிளை நிர்வாகிகள் ஒரு லட்சத்தி பன்னிரண்டாயிரத்தி அறநூத்தி எண்பலது பேர் என மொத்தம் இரண்டு லட்சத்தி தொண்ணூத்தி ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பலது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ இவ்வாறு அவர் பேசினார். தமிழை தெளிவாக படிக்க தெரியாதவர்கள், தமிழகம் என்ற கட்சி பெயர் வைத்து உள்ளனர் எனவும், தமிழ் மெல்ல மெல்ல சாகும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது ஒரு புதிய மொழி என்றும் கலாய்த்து வருகின்றனர்.